ANTARABANGSA

லண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில்  இரு பெண்களுக்கு கத்திக் குத்து- ஆடவர் கைது

லண்டன், ஆக. 13 - லண்டனின் புகழ்பெற்ற லீசெஸ்டர் சதுக்கத்தில் 11 வயது சிறுமி மற்றும் 34 வயது பெண் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து  ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

 அந்த பிரசித்தி பெற்ற சுற்றுலா  மையத்தில் நேற்று நிகழ்ந்த  தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது

அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் குறித்த   உடனடி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த சந்தேக நபர் காவலில் உள்ளார். அவர் மட்டுமே சந்தேக நபர் என்று கருதப்படுகிறது.

கடைகள்,திரையரங்குகள் மற்றும் உணவகங்களை உள்ளடக்கிய அந்த சதுக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் 25 லட்சம் பேர் வருவர் என 
மதிப்பிடப்படுகிறது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து  சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். லீசெஸ்டர் சதுக்கத்தில் பெண்கள்  கத்தியால்  குத்தப்பட்ட இடத்தில் 
அதிகாரிகள் உள்ளனர் என்று போலீசார் அறிக்கை ஒன்றில் கூறினர்.

ஒரு நபர்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேறு சந்தேக நபர்கள் யாரும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

பாதிக்கப்பட்ட  11 வயது சிறுமி மற்றும் 34 வயது பெண் ஆகியோர் 
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் நிலை குறித்த அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Pengarang :