NATIONAL

பல காரணிகளால் பகடிவதை சம்பவங்கள் ஏற்படுகின்றன

ஷா ஆலம், ஆகஸ்ட் 13: மதம், குடும்பப் பின்னணி, பணிச் சூழல் ஆகியவற்றுடன்  அன்பு இல்லாமை மற்றும் நண்பர்களின் தாக்கம் ஆகியவை பகடிவதை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

உளவியல், வாய்மொழி மற்றும் உடல் ரீதியான மூன்று வகையான பகடிவதைகள் அடிக்கடி நிகழ்கிறது என சிலாங்கூர் ஆலோசனை மையத்தின் (பிகேஎஸ்) ஆலோசகர் முகமட் ஃபுவாட் முகமட் அலி கூறினார்.

“வயது, பதவி மற்றும் கல்வி நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இந்த பகடிவதை மிகவும் அகநிலையானது. பொதுவாகப் பகடிவதையில் ஈடுப்படுபவர்கள் குடும்பத்திலிருந்து குறைந்த அன்பு அல்லது கவனம் பெறுபவர்களாக இருப்பர்.

“மற்றொரு காரணம், மதக் கல்வி இல்லாத காரணத்தால் சிலர் பகடிவதையில் ஈடுப்பட தூண்டப்படுகிறார்கள்.

பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை ஆகிய மூன்று அம்சங்களில் குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்றும் ஃபுவாட் கூறினார்.

“உடலில் ஏற்படும் விளைவுகள் தலைவலி, ஒற்றைத் தலைவலி, தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்திருப்பது மற்றும் மோசமான தூக்கம் நிலை போன்ற உடல்நலப் பிரச்சனைகளை உள்ளடக்கியது.

” உணர்ச்சி வகையில் மன அழுத்தம், பயம், பதட்டம், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் அச்சுறுத்தல் போன்ற உணர்வுகள் ஏற்படும்.

“நடத்தையில் ஏற்படும் விளைவு மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது மகிழ்ச்சியான நிலையிலிருந்து ஒருவர் கவலையான நிலைக்குத் தள்ளப்படுவார். மேலும், வேலையின் செயல்திறன் அல்லது கல்வியில் சரிவு ஏற்படும்.

அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழும். இது மிகவும் கவலைக்குரியது,” என்று அவர் விளக்கினார்.


Pengarang :