NATIONAL

இந்த டிசம்பரிலிருந்து ஓய்வூதியம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள விகிதங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த டிசம்பரிலிருந்து ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

ஓய்வூதியம் பெறுபவரின் இறுதி ஊதியத்தின் அடிப்படையில் அதன் விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“மலேசிய ஆயுதப்படைகளின் (ஏடிஎம்) தியாகம் மற்றும் சேவையை மறக்க முடியாது. ஓய்வூதியம் பெறாத தகுதி பெற்ற ஏடிஎம் வீரர்களுக்கு உதவித்தொகை (பிஎஸ்எச்) மாதம் 300 ரிங்கிட்டிலிருந்து 500 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

“சம்பந்தப்பட்ட ஏடிஎம் வீரர்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க இந்த பரிசீலனை செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.

தனியார் துறை, குறிப்பாக அதிக லாபத்தைப் பதிவு செய்யும் நிறுவனங்கள், தொழிலாளர்களின் உற்பத்தி திறன் மற்றும் தியாகத்தைப் பாராட்டுவதற்கான அடையாளமாக அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை பின்பற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :