NATIONAL

எட்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பெற்றோர் கைது

கோலாலம்பூர், ஆக. 19 – தங்களின் மகளுக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு
துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அந்த எட்டு வயதுச்
சிறுமியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமியின் சொந்த தாயாரையும் வளர்ப்புத் தந்தையையும் கடந்த
சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தாங்கள் கைது செய்ததாகக்
கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிபின் முகமது நாசீர்
கூறினார்.

அன்றைய தினம் மாலை 3.27 மணியளவில் ரவாங், பண்டார் தாசேக்
புத்ரியில் உள்ள வீடு ஒன்றில் அச்சிறுமி உயிரிழந்தது தொடர்பில்
தங்களுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவ்விருவரும் கைது
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

அச்சிறுமியின் முகம், கைகள், கால்கள் மற்றும் உடலில் காயங்களும்
சிராய்ப்புக் காயங்களும் காணப்பட்டன. கை,கால்களைக் கொண்டும்
இடைவார், உடைகளை மாட்டும் ஹெங்கர் மற்றும் கடினமானப்
பொருள்களாலும் அச்சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் என்பதை தொடக்கக்
கட்ட சோதனைகள் காட்டுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

அச்சிறுமியின் உடல் சவப்பரிசோதனைக்காகச் சுங்கை பூலோ
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இச்சம்பவம்
தொடர்பில குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

இருபத்தெட்டு மற்றும் 29 வயதுடைய அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும்
பாதுகாவலர் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களாக வேலை செய்து
வந்த்துள்ளனர். இவ்விருவம் விசாரணைக்காக ஏழு நட்களுக்குத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் ஆண்டு மாணவியான அச்சிறுமி கடந்த ஜூன் மாதம் முதல்
பள்ளிக்குச் செல்லவில்லை என்பதை தொடக்கக் கட்ட விசாரணைகள்
காட்டுகின்றன.


Pengarang :