SELANGOR

RM800,000 கட்டுமான செலவில் முதல் பூனை பூங்கா திறக்கப்பட்டது

கிள்ளான், ஆகஸ்ட் 20: பண்டார் புக்கிட் ராஜாவில் முதல் பூனை பூங்கா RM800,000 கட்டுமான செலவில் கிள்ளான் மாநகராட்சியால் திறக்கப்பட்டது.

பூங்கா நிர்மாணிப்புக்கு 200 ஏக்கர் (80.9371 ஹெக்டேர்) சைம் டார்பி ப்ராப்பர்ட்டியின் ஒத்துழைப்பால் கிடைத்ததாக அதன் மேயர் டத்தின் படுகா நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

“தற்போது அதிகரித்து வரும் பூனைகளின் எண்ணிக்கையால் ஏற்படும் தொல்லைகளை இந்த பூங்கா மூலம் சமாளிக்கும் முடியும் என அவர் தெரிவித்தார்.

“இந்த பூங்காவை உருவாக்கவும், பூனைகளுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான இடமாக மாற்றவும் சைம் டார்பி பிராப்பர்ட்டியுடன் கூட்டு சேர்ந்தது எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் கூறினார்.

கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பூனைப் பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, இவ்விழா சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இப்பூங்காவில் தனிமைப்படுத்தும் அறை, சிகிச்சை அறை, பூனை வீடு, விளையாட்டு பகுதி, சிசிடிவி கேமரா மற்றும் அலுவலகம் போன்ற வசதிகள் உள்ளன என்று நோரைனி கூறினார்.

தெருப் பூனைகளை எம்பிடிகே பராமரிப்பதற்கு உதவ, பொதுமக்களும் உணவு அல்லது நன்கொடை அளிக்க அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

“150 பூனைகளுக்கு இடமளிக்கக் கூடிய பூங்காவில், பூனைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காகக் கால்நடை மருத்துவ குழு கிளினிக்கின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

“விலங்குகள் மீதான அன்பின் உணர்வைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதில் இது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் கைவிடப்பட்ட விலங்குகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைகின்றன,” என்று அவர் கூறினார்.


Pengarang :