SELANGOR

புகார்களைப் பொதுமக்கள் நேரடியாகப் புலனம் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 20: இனி புகார்களைப் பொதுமக்கள் நேரடியாக சுபாங் ஜெயா
மாநகராட்சி துறைக்கு புலனம் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம்.

இந்த சேவை வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்
என்று முகநூல் மூலம் பிபிடி தெரிவித்துள்ளது.

"ஆகஸ்ட் 19 முதல், நகர சமூகம் மற்றும் பொதுமக்கள் சுபாங் ஜெயா மாநகராட்சியின்
உள்துறையை நேரடியாகப் புலனம் மூலம் தொடர்பு கொள்ளலாம் அதாவது
பட்டியலிடப்பட்ட எண்ணுக்குப் புகார்களை அனுப்பலாம்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, மக்கள் தனது துறைக்கு நேரடியாகப் புகார்களை தெரிவிப்பதை எளிதாக்கும்
வகையில் வாட்ஸ்அப் சேவையை உருவாக்க விரும்புவதாகச் சுபாங் ஜெயா மேயர்
அமிருல் அஜிசன் கூறினார்.

இது குடியிருப்பாளர்களை பிபிடியுடன் விரைவாக இணைக்கும். உதாரணமாக சாலை
சேதங்கள் பற்றிய புகார்கள் பொறியியல் துறைக்கு தெரிவிக்கப்படும்.
எம்பிஎஸ்ஜே தகுந்த நடவடிக்கை எடுக்க, குடியிருப்பாளர்கள் சரியான முகவரியுடன்
படங்களை எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டது.

Pengarang :