NATIONAL

ஆப்கானியர்களுக்காக அமெரிக்க விசா மையத்தை ஏற்று நடத்த பிலிப்பைன்ஸ் ஒப்புதல்

மணிலா, ஆக 20 – குறைந்த எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்காக அமெரிக்க புலம்பெயர்ந்தோர் விசா பரிசீலிப்பு  மையத்தை தற்காலிகமாக நடத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு  தங்கள் நாடு ஒப்புக்கொண்டதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சு  தெரிவித்தது.

சிறப்பு புலம்பெயர்ந்த விசா மற்றும் அமெரிக்காவிற்கு மறு குடியேற்றத்திற்கான விசா  பரிசீலனையை  முடிக்க குறைந்த எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அனுப்ப பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளது என்று சின்ஹுவா  செய்தி நிறுவனம் கூறியது.

பிலிப்பைன்ஸில் தற்காலிகமாக தங்கும்  ஆப்கானியர்களுக்கு  உணவு, வீடு, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் விசா  போக்குவரத்து ஆகியவை சேவைகளை அமெரிக்க அரசாங்கம்  வழங்குவதும் இதில் அடங்கும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் கடந்த ஆண்டு மே மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின் போது  பிலிப்பைன்ஸ் அதிபர்  ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரிடம் இந்த கோரிக்கை குறித்து  விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கோரிக்கை பகிரங்கப்படுத்த பட்டதைத் தொடர்ந்து சாத்தியமான பாதுகாப்பு மற்றும் பிற காரணங்கள் தொடர்பான உள்ளூர் மக்களின் கவலைகளை பிலிப்பைன்ஸ்  எதிர்கொண்டது.


Pengarang :