ANTARABANGSANATIONAL

புதுடில்லியில் உள்ள புலம் பெயர்ந்த மலேசியர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

புதுடில்லி, ஆக. 21 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இந்திய பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று இங்குள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெற்ற  புலம்பெயர்ந்த மலேசியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர், நாட்டின் செல்வம்  அந்நிய நாட்டினரால்  சுரண்டப்படுவதைத் தடுக்க, டீசல் மானியங்களை மறுசீரமைப்பு செய்வது போன்ற சில  பிரபலம் இல்லாத முடிவுகளை மலேசியா எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக எடுத்துரைத்தார்.

கடந்த  19 முதல் 21 வரை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், அங்குள்ள மாணவர்கள் மற்றும் இளம் மலேசியர்கள் வாழ்வில் நல்லதைப் பாராட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வாய்ப்புகள் வழங்கப்படும் வரை, ஒத்துழைப்பு நல்கப்படும் வரை, நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் என்று அவர் கூறினார்.

இன்று,  இந்திய தொழில்துறை தலைவர்கள் மற்றும் பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்கும் அன்வார்,  கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன் மலேசிய ஊடகங்களுடன்  செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.

– பெர்னாமா


Pengarang :