NATIONAL

2.0 மெகா சாலை மேம்பாட்டு திட்டம் கடுமையாகச் சேதமடைந்த சாலைகள் மீது கவனம் செலுத்தும்

சபாக் பெர்ணம், ஆகஸ்ட் 21: எதிர்வரும் செப்டம்பரில் தொடங்கும் 2.0 மெகா சாலை மேம்பாட்டு திட்டமானது கடுமையாகச் சேதமடைந்த சாலைகளில் மீது கவனம் செலுத்துகிறது.

மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல், அதன் மேம்பாட்டு பணி தொடங்கும் முன், முக்கியமான சாலைகளை ஆய்வு செய்து வருகிறது என உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்

“சாலைகளை மேம்படுத்த பல விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். ஆனால் இம்முறை முன்னுரிமையின் அடிப்படையில் தேர்வு செய்வோம்.

சாலைகள் அடையாளம் காணப்பட்ட பிறகு, நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களின்படி முன்னுரிமை அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பரில் இந்த திட்டத்தை தொடங்குவோம், என்றார்.

தஞ்சோங் காராங்கில் உள்ள ஜாலான் பாகான் பாசிரில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு கூறினார்.

2021 முதல் கடந்த ஆண்டு வரை, பயனர் வசதியை உறுதி செய்வதற்காக 39,000க்கும் மேற்பட்ட சாலை மேம்பாட்டு பணிகள் இன்ஃப்ராசெல்லால் மேற்கொள்ளப்பட்டன.


Pengarang :