NATIONAL

தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை லிட்டருக்கு இரண்டு சென் குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை பெட்ரோல் RON95 மற்றும் RON97 ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 மற்றும் RM3.47 ஆக இருக்கும். அதே சமயம் தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை லிட்டருக்கு RM3.25இலிருந்து RM3.23ஆக இரண்டு சென் குறைந்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, தீபகற்ப பகுதியில் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அரசாங்கம் சந்தை முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, உலகளாவிய எண்ணெய் சந்தை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் டீசல் எரிபொருளின் சில்லறை விலையை சரிசெய்து, விலை ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும்” என்று அது கூறியது.

மேலும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு ரிங்கிட்2.15 ஆக உள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :