NATIONAL

பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: நேற்று ஜாலான் சிம்பாங் மோரிப், கம்போங் கிளானாங், பந்திங் சாலையில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் உதவி ஓட்டுனர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

மதியம் 1 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் வாகனத்தின் ஓட்டுனர் சிக்கிக் கொண்டார் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) இயக்குனர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

மாநிலச் செயலாளர் அலுவலகத்துக்குச் சொந்தமான அப்பேருந்து சுமார் இரண்டு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில் மொத்தம் 14 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

“30 முதல் 40 வயதுக்குட்பட்ட பேருந்து ஓட்டுனர் உதவியாளர் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் பந்திங் மருத்துவமனையின் மஞ்சள் மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட பேருந்து மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார்கள் என்று இந்தச் செய்தியைப் பெற்ற டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் நலமாக இருக்கவும், சிகிச்சை பெற்று விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என்று முகநூலில் தெரிவித்தார்.


Pengarang :