NATIONAL

தொடர் கனமழையால் மண் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: நேற்று மதியம் 4 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் வார்டிபர்ன் கேம்ப் அருகே உள்ள தாமான் பூங்கா ராயா, ஜாலான் கெந்திங் கிள்ளான் பகுதியில் மண் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து வீடு பாதிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 5.43 மணிக்கு இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.   இது தொடர்பாக, இயந்திரத்துடன் ஆறு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர், இதனால் அப்பகுதியில் உள்ள வீடொன்று பாதிக்கப்பட்டுள்ளது.

“வீடு மற்றும் அருகிலுள்ள பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும் தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டு கொண்டதாக,” அவர் கூறினார்.

அவ்விடத்தில்  இன்னும் மண் அசைவுகள் காணப்படுவதால், சம்பவ  இடத்தை  அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து  வருகின்றனர்.


Pengarang :