NATIONAL

சிலாங்கூர் இன்று மற்றும் இந்திய சமுதாய தலைவர்களிடையே கருத்து பரிமாற்றம் அமர்வு

ஷா ஆலம், ஆகஸ்ட் 23: இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளர் அலுவலகத்தில் மீடியா சிலாங்கூர் குறிப்பாக சிலாங்கூர் இன்று மற்றும் இந்திய சமுதாய தலைவர்களிடையே கருத்து பரிமாற்றம் அமர்வு ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இந்திய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்வை மீடியா சிலாங்கூரை சேர்ந்த திரு ஜஸ்தின் ராஜ் வழிநடத்தினார். நிகழ்வில் தொடக்கத்தில் வருகையாளர்களுக்கு மீடியா சிலாங்கூரைப் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனம் மலாய், ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனா மொழிகளில் செய்திகளை வெளியிடுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந் நிறுவனத்தில் சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்களிடத்தில் சென்று சேர முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சமுதாயத்திலும் நிகழும் பிரச்சனைகள் அல்லது சம்பவங்கள் போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும், இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால், இதில் இந்தியர்கள தொடர்பான செய்திகள் வெளிவருவது சற்று குறைவாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு தீர்வு காணவே இன்று இந்த கருத்து பரிமாற்றம் அமர்வு மேற்கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொள்ளும் பல சிறந்த திட்டங்கள் அல்லது நடவடிக்கைகளை மக்களிடத்தில் எளிதான முறையில் கொண்டு சேர்ப்பதில் இந்திய சமூதாய தலைவர்களின் பங்கு அளப்பரியது என்பதால் அரசாங்க சேவைகளும் அதே வேளையில் கே.கே. ஐ போன்ற அரசு சார்பு இயக்கங்களின் தலைவர்கள் மக்களுக்கு ஆற்றும் சேவைகள் குறித்த விளக்க செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நோக்கத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடானதாக திரு ஜஸ்தின் ராஜ் கூறினார்

ஆகவே, இந்நிகழ்வில் மீடியா சிலாங்கூர் மூலம் எவ்வாறு மக்களுக்குப் பயனளிக்கும் செய்திகளை எளிதான முறையில் அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மற்றும் அதில் இந்திய சமுதாய தலைவர்களின் பங்கு எவ்வாறு அமைய  வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.


Pengarang :