NATIONAL

இந்தியர்களுக்குப் பயனளிக்கும் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் இந்திய சமுதாய தலைவர்களின் பங்கு அளப்பரியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 23: இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளர் அலுவலகத்தில் மீடியா சிலாங்கூர் மற்றும் இந்திய சமுதாய தலைவர்களிடையே நடந்த கலந்துரையாடலில்  மக்களுக்கு பயனளிக்கும் செய்திகளை எளிதான முறையில் அவர்களிடத்தில்  எப்படி கொண்டு சேர்ப்பது மற்றும் அதில் இந்திய சமுதாய தலைவர்களின் பங்கு எவ்வாறு அமையும் என கலந்துரையாடப்பட்டது.

தற்போது இந்திய சமுதாய தலைவர்களின் சேவைகள் கூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும்  பகிரப்படுகிறது.  இதனால்  நமக்கு வந்து சேர வேண்டிய பயன் நம் சமுதாயத்திற்கு வந்து சேர்வதில்லை.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குச்” சிலாங்கூர் இன்றுடன் ” இந்திய சமுதாய தலைவர்கள்  கைகோர்த்தால்   நாம்  இன்னும் பலமாக  இந்த மாநிலத்தில்  நடை போடலாம் என திரு ஜஸ்தின் தெரிவித்தார்.

அதாவது, இந்திய சமுதாய தலைவர்கள், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தகுந்த புகைப்படத்துடன் சிலாங்கூர் இன்று அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம், இந்திய சமுதாயத்திற்கு நீங்கள்  நடத்தும் நடவடிக்கைகள்  மாநில   அளவில்   சிறந்த  விளம்பரத்தை பெறும். அதே வேளையில்  அப்படிப்பட்ட  சேவைகளின் வழி பொது மக்களும் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, சிலாங்கூர் இன்று எதிர்காலத்தில் “Kenali KKIS”  எனும் திட்டத்தையும் அமல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய சமுதாய தலைவரையும் மற்றும் அவர் ஆற்றும் சேவைகளும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க சிலாங்கூர் இன்று அதன்  இணையதள ஏட்டிலும், மாத இதழிலும் கூட சிறப்பு பக்கங்களை  ஒதுக்க தயாராகவுள்ளது என்றார் அவர்.

எனவே, இத்திட்டத்தை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு அதில் பங்கு பெற இந்திய சமுதாய தலைவர்களுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், அதனால் நாம் பலம் பெற முடியும், சமுதாயத்தை ஒன்றுபடுத்தி முன் நிறுத்தி, நமது கோரிக்கைகளை பிரதமர் முதல் மாநில மந்திரி புசார் காதுகளுக்கு எட்டும் வரை எடுத்து வைக்கலாம்.

இது போன்ற நடவடிக்கைகள் இந்திய சமுதாய தலைவர்கள் மேலும் சிறப்பான சேவையை நடத்த ஊக்குவிக்கும் எனவும் திரு ஜஸ்தின் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :