SELANGOR

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கையாகக் கருவிகளை பராமரிக்க பிபிடிகளுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: தற்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து இயற்கை
பேரிடர்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கையாக கருவிகளை பராமரிக்க அனைத்து
ஊராட்சி அமைப்புகளுக்கும் (பிபிடி) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிபிடிகள் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (APM) உள்ளிட்ட பாதுகாப்பு
நிறுவனங்களையும் எந்த நேரத்திலும் சேவைக்கு தயாராக இருக்குமாறு மாநில பேரிடர்
மேலாண்மை பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இதில் மீட்புப் பணியின் போது தேவைப்படும் படகுகள் மற்றும் பிற கருவிகளும்
அடங்கும். வெள்ளம் மட்டுமின்றி நிலச்சரிவு சம்பவங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

படகுகள் மற்றும் பிற கருவிகள் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,
இதன் மூலம் அவசரகால சூழ்நிலைகளை சுமூகமாக நிர்வகிக்க முடியும் என்று மாநிலப்
பேரிடர் மேலாண்மை பிரிவின் செயலாளர் முகமட் ஹனாஃபி அஹ்மட் கூறினார்.

இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பற்றிய புகார்களை மாநில பேரிடர் மேலாண்மை
பிரிவு பெறவில்லை, மாறாக திடீர் வெள்ளம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என அவர்
கூறினார்.

பெட்டாலிங், கிள்ளான் மற்றும் உலு லங்காட் இயக்க மையங்கள் அனைத்துப்
பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிகப்பில் ஈடுப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளம்
பற்றிய புகார்களை மட்டுமே நாங்கள் பெறுகிறோம். இதுவரை எந்த நிலச்சரிவும்
ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.


Pengarang :