NATIONAL

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 38 நபர்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை காப்பாற்றியது

கோலாலம்பூர், ஆக. 24 – நேற்று இரவு உலு ரெனிங், பத்தாங் காலியில் உள்ள முகாம் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 38 நபர்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) காப்பாற்றியது.

இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு இரவு 8.04 மணிக்கு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு எட்டு பணியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“இந்த சம்பவத்தில் 10 ஆண்கள், 17 பெண்கள், 8 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் அடங்கிய 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதன்பின்னர் அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :