SELANGOR

கோலா குபு பாரு தொகுதியில் 112 எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: கோலா குபு பாரு தொகுதியில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்து விளங்கிய 112 மாணவர்களுக்கு மொத்தம் RM24,050 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத்தொகை 5A மற்றும் அதற்கு மேற்பட்ட தேர்வு முடிவுகளைப் பெற்ற 106 எஸ்பிஎம் மாணவர்களுக்கும் மீதமுள்ள 4A மற்றும் 3.75 சராசரி புள்ளியை பெற்ற ஆறு எஸ்டிபிஎம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது என பாங் சோக் தாவ் கூறினார்.

மேலும், எஸ்பிஎம் மாணவர்களுக்கு RM100 (5A), RM150 (6A), RM200 (7A), RM250 (8A), RM300 (9A) மற்றும் 10A மற்றும் அதற்கு மேல் RM350 வழங்கப்பட்டது என அவர் கூறினார்.

“106 எஸ்பிஎம் மாணவர்களுக்கு மொத்தம் RM21,650 வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மீதத் தொகை RM2,400 ஆறு எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மொத்த வெகுமதித் தொகை RM24,050 ஆனது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

கோலா குபு பாரு தொகுதியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது ஒரு வருடாந்திர திட்டமாகும். ஆனால், இந்த ஆண்டு விண்ணப்பங்கள் இரட்டிப்பாகியுள்ளன.

“நானே ஒரு சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தேன், அதனால்தான் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

தகுதியுடைய அனைத்து இனங்களும் பயன்பெறும் மடாணி மலேசியா நீதியின் கோட்பாட்டிற்கு இணங்க இத்திட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒதுக்கீடு முடிந்தவரை சிறப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வேன், இதன் மூலம் அதிக வாக்காளர்கள் பலன்களைப் பெற முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :