சிலாங்கூர்  குழுவை 6-1 என்ற கால் கணக்கில் வீழ்த்தி எஃப்.சி. கிண்ணத்தை கைப்பற்றியது ஜோகூர்

கோலாலம்பூர், ஆக. 25- இங்குள்ள புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2024/2025  எஃப்.ஏ. கிண்ண இறுதியாட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சி. குழுவை ஜோகூர் தாக்சிம் (ஜே.டி.டி.) அணி  6-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. 

ஜோகூர் குழுவின் இறக்குமதி ஆட்டக்காரர் ஜூவான் முனிஸ் அடித்த மூன்று கோல்கள் ஹரிமாவ் செலாத்தான் எனப்படும் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்து மூன்றாவது முறையாக எஃப்.ஏ. கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளின் ஆட்டக்காரர்களும் தீவிர வேகத்தை வெளிப்படுத்தி கோலடிப்பதில் முனைப்பு காட்டினர். எனினும், கோலடிப்பதற்கு கிடைத்த பல வாய்ப்புகளை இரு அணிகளும் தவறவிட்டன.

ஹெக்டர் பிடோக்லியோவை பயிற்றுநராகக் கொண்ட ஜே.டி.டி. குழு ஆட்டத்தின் 26 மற்றும் 42வது நிமிடங்களில் இரு கோல்களைப் புகுத்தி முதல் பாதி ஆட்டத்தை நிறைவு செய்தது.

முதல் பாதி ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் நிறைவுக்கு வந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தை சிலாங்கூர் அணி நம்பிக்கையுடன் தொடங்கிய சிலாங்கூர் அணி தனது முதலாவது கோலை குழுவின் இறக்குமதி ஆட்டக்காரர் அல்வின் போர்ட்டிஸ் மூலம் 59வது நிமிடத்தில் புகுத்தி சிவப்பு மஞ்சள் குழுவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தீவிரத் தாக்குதலைத் தொடங்கி ஜோகூர் அணி 62 மற்றும் 67வது நிமிடங்களில் மேலும் இரு  கோல்களைப் புகுத்தி சிலாங்கூரை நிலைக்குலையச் செய்தது. 

ஜோகூர் மாநிலம் தனது ஐந்தாவது கோலை ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் புகுத்திய வேளையில்  ஆட்டம் ஏறக்குறைய முடியும் 

தறுவாயில் முனிஸ் மேலும் ஒரு கோலை புகுத்தி ஜோகூரை 6-1 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணிக்கு கொண்டு வந்தார்.


Pengarang :