SELANGOR

சுங்கை பெர்ணமில் நீர் விநியோகம்  முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஆக. 26 – சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு மையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஏற்பட்ட அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை நேற்றிரவு 11.00 மணிக்கு முழுமையாக வழக்கத் நிலைக்குத் திரும்பியது.

நீர் பெருக்கு காரணமாக ஆற்றில் நீர் கலங்கலாக ஆனதைத் தொடர்ந்து அந்த சுத்திகரிப்பு மையம் தற்காலிகமாக மூடப் பட்டதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோகத் தடை காலத்தில் பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

வாடிக்கையாளர்கள் நீர் விநியோகம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்களான அகப்பக்கம், பேஸ்புக், இண்ட்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் வாயிலாகவும் 15300 என்ற எண்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என அது தெரிவித்தது.

அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நீர் விநியோகத் தடை தொடர்பான அறிவிப்பை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு மையம் நேற்று நண்பகல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :