ANTARABANGSANATIONAL

தோக்கியோ விபத்தில் சிக்கியவர்களில் ஐவர் மலேசியர்கள்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7: ஜப்பானின் தோக்கியோவில் நேற்று இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களில் ஐந்து மலேசியர்களும் அடங்குவர் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

ஐந்து மலேசியர்களும் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் தங்கள் ஹோட்டலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகம் அறிக்கை ஒன்றில்
உறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு தோக்கியோவின் ஹச்சியோஜியில் உள்ள சூவோ எக்ஸ்பிரஸ்வேயில் காலை 10.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், மொத்தம் 47 பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன.
அதில் பயணித்தவர்கள் பெரும்பாலோர் வெளிநாட்டினர் ஆவர்.

ஒரு பேருந்து மற்றொன்றின் பின்னால் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கியோடோ செய்தி நிறுவனத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களில், உயிருக்கு ஆபத்தான காயங்கள் எவருக்கும் ஏற்படவில்லை.


Pengarang :