NATIONAL

பொது ஒப்பந்தப்புள்ளியின்றிக்  குத்தகை வழங்கப்பட்ட 101 திட்டங்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை

மலாக்கா,  செப் 2-  கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் துங்கு ஷப்ரோல் அசிஸ் பக்காத்தான் ஹராப்பானின் 22 மாத ஆட்சிக் காலத்தில் பொது ஒப்பந்தப்புள்ளியின்றி (டெண்டர்) நேரடி பேச்சுவார்த்தை மூலமாக 101 திட்டங்களுக்குக் குத்தகை வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ அசாம் பக்தி அத்திட்டங்கள் மீது எந்தவொரு விசாரணைக்குமான அறிக்கைகளைத் தயார்படுத்தவில்லை. அந்தத் திட்டங்கள் மீது விசாரணை நடத்தும் முன், திட்டங்களைப் பெற்ற நிறுவனங்கள் மீது ஊழலுக்கான குற்ற அம்சங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பதனைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினார்.

நிதி அமைச்சின் வழிமுறைப்படி 3 முறைகளில் குத்தகைகள் வழங்கப்படுவதாகவும், அதில் ஒன்றுதான் நேரடி பேச்சுவார்த்தை மூலமான குத்தகை வழங்குவதாகும் என்றார் அவர்.

வேறொரு நிலவரத்தின் மீது கருத்துரைத்த  அவர் 2015 ஆண்டு முதல்  ஆகஸ்டு 2020 வரை பொது மக்களிடமிருந்து மலாக்கா ஊழல் தடுப்பு வாரியம் ஊழல் மற்றும் முறைகேடுகள் மீதான 1196 புகார்களைப் பெற்றதாகவும், அதன் அடிப்படையில் 427 குற்றப்பத்திரிக்கைகள் தயார்படுத்தப் பட்டதாகவும் 119 பொதுச் சேவை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும் கூறினார்.

 

 


Pengarang :