NATIONAL

வெ. 146 கோடி மதிப்புள்ள புதிய மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி

ஷா ஆலம், செப் 2-  இவ்வாண்டு ஜனவரி  மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான வரையிலான காலகட்டத்தில் 146 கோடி வெள்ளி மதிப்புள்ள 61 தயாரிப்பு துறை சார்ந்த திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட  அங்கீகாரத்தின் வழி மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த முதலீடுகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த முதலீடுகள் வழி கிடைக்கப் பெறும் வேலை வாய்ப்புகள் மலேசியா்களுக்கு குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயனாக அமையும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹர்த்தலேகா, இக்கியா, பெரேடுவா குளோபல், புரோட்டோன், டோப் குளோப் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலீடு பல்வேறு வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார் அவர்.

இந்நடவடிக்கை மாநில அரசின் மேம்பாட்டு திட்டமிடலில் ஆக்ககரமான பயன்களைக் கொண்டு வரும் என்றும் மந்திரி புசார் நம்பிக்கை தெரிவித்தார்.

 


Pengarang :