SELANGOR

சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை

கோலாலம்பூர், செப் 4- சுங்கை சிலாங்கூர் ஆற்றில் நேற்று மாசு படர்ந்த தைத் தொடர்ந்து மூடப்பட்ட சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும் 3ஆம் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங் சுத்திகரிப்பு மையம் ஆகியவை இன்று அதிகாலை 6.30 மணி வரை செயல்படத் தொடங்கவில்லை.

அந்த சுத்திகரிப்பு மையங்கள் இன்னும் மாசுபட்டுள்ளதோடு டான் எனப்படும் அதன் மாறுநிலை மணச் சோதனை அளவு 1 என்ற நிலையில் உள்ளதாக  ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனத்தின் தொடர்புப் பிரிவுத் தலைவர் எலினா பஸ்ரி கூறினார்.

மாறுநிலை மணச் சோதனையின் அளவு 0 என்ற நிலைக்கு வந்தால் மட்டுமே அந்த சுத்திகரிப்பு மையங்களை மறுபடியும் இயக்க முடியும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சுத்திகரிக்கப்படாத நீர் மாசுபட்ட காரணத்தால் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஏழு வட்டாரங்பகுதிகளில்  நேற்று காலை 10.30 மணி தொடங்கி அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட் ஆகியவையும் அடங்கும்.

 


Pengarang :