NATIONAL

நிலத்தில் மேற்கொள்ளப்படும், தொழிலை  நிறுத்தி நிலத்தை அரசிடம் ஒப்படைக்க  நிறுவனத்திற்கு உத்தரவு

கோலாலம்பூர், செப் 5- நீர் தூய்மைக்கேட்டிற்குக் காரணமான
தொழிற்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நிலத்தை
ஒப்படைப்பதற்கும் உத்தரவிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ
அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அந்தத் தொழிற்சாலை பணிகளை நிறுத்துவதற்கும் கட்டிடங்களை
அகற்றி நிலத்தை  ஒப்படைப்பதற்கும் ஏதுவாகக் கோம்பாக் மாவட்ட
மற்றும் நில அலுவலகம்  நிபந்தனை மீறலைச் சரி செய்யும் (7ஏ )
அறிக்கையைச் சார்வு செய்யும் என்று அவர் சொன்னார்.

தற்போது கனரக இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணிகளை
மேற்கொண்டு வரும் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர்களிடம்
வரும் திங்கள்கிழமை  அந்த உத்தரவு ஒப்படைக்கப்படும் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

ஆற்று தூய்மைக்கேடு தொடர்பில் ஆயர் சிலாங்கூர் எனப்படும்
சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற
கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினர்.

ரவாங்கிலுள்ள அந்தத் தொழிற்சாலை மீது கடந்த மார்ச் மாதம்
நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அந்நிறுவனம் தன் மூப்பாக கடந்த
ஜூன் மாதம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் முறையாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்தொழிற்சாலைக்குச் சுற்றுச்சூழல் துறை அபராதம் விதித்துள்ளது.
செலாயாங் நகராண்மைக் கழகமும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இருந்த போதிலும் அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது
என்றார் அவர்.


Pengarang :