NATIONAL

ஏழ்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அன்வார் பாடு படுவார்

ஷா ஆலம், செப் 28- நாட்டில் நிலவிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய கடந்த 2018ஆம் ஆண்டு மே 9தாம் தேதி மக்கள் வழங்கிய தீர்ப்பினை நாம் முழுமையாக மதிக்கும் வேளையில், மக்கள் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார் கெஅடிலான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஜொகாரி அப்துல்.

பல அம்னோ மற்றும் பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின்  ஆதரவைக் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்குத் தெரிவித்திருப்பதும், மீண்டும் மத்தியில்  பக்காத்தான் ஹராப்பான்  ஆட்சியை மலரச் செய்ய விரும்புவதற்கு அதுவே முதல் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.

பல அம்னோ மற்றும் பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின்  ஆதரவை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பக்கம் திரும்பியுள்ளது, அரசாங்கத்தில் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தனது பெரும்பான்மையை  இழந்துள்ளதைப் புலப் படுத்துகிறது

கோவியட்19 நோய் தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ள வேளையில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாட்டிற்குச் சிறந்த தலைமைத்துவமும் நிலையான, பலமான அரசாங்கமும், சீரிய திட்டங்களும் தேவை என்பதுடன்.  நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சட்ட ஒழுங்கு கூறுகளுக்கும் மதிப்பு வழங்குவதில் மலரவிருக்கும் புதிய அரசாங்கம் விட்டுக்கொடுக்கும் போக்கைப் பின் பற்ற முடியாது என்றார் அவர்.

புதிய அரசாங்கம் சட்டத்துறை முதல் தேவைப்படும் மற்றத் துறைகளின் மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தங்களுக்கும் இடமளிக்கும் என்று நம்புகிறோம்.

நமது மாமன்னர் அவர்கள் விரைந்து குணமடைந்து அவரின் பணியினை செவ்வனே மேற்கொள்ள இறைவன் அவருக்கு அருள கெஅடிலான் நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  பிராத்திப்பதாகவும் அவர் கூறினார்.


Pengarang :