Paras air di LRA Sungai Semenyih. Foto ihsan Air Selangor
NATIONALSELANGOR

நீரில் துர்நாற்றத்தின் அளவுக்கு குறைந்தது நீர் சுத்திகரிப்பு பணியை தொடக்கியது சுங்கை செமினி நிலையம்

ஷா ஆலம், அக் 6- சுங்கை செமினி சுத்திகரிப்பு மையத்தில் நீர் தூய்மைக்கேடு 
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 

அங்கு டோன் எனப்படும் நீரில் கலந்துள்ள துர்நாற்றத்தின் அளவு சுழியத்திற்கு குறைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த சுத்திகரிப்பு மையத்தில் தற்போது சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பயனீட்டாளர்களுக்கு கட்டங் கட்டமாக நீர்   விநியோகிக்கப்படும் என்றும் 
அவர் குறிப்பிட்டார்.

சுங்கை செமினி சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட நீரின் தரம் தொடர்பான சோதனையில் டோன் அளவு தொடர்ந்து மூன்று முறை சுழியத்தை காட்டியதாக 
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.

எனினும், புக்கிட் தம்போய் சுத்திகரிப்பு மையத்தில் நேற்று மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் டோன் அளவு 2 ஆக பதிவானதாக அது மேலும் தெரிவித்தது.

Pengarang :