இணையம் வாயிலாக சீனப்புத்தாண்டு கொண்டாட்டம்- சிலாங்கூர் அரசு ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 2– இவ்வாண்டு சீனப்புத்தாண்டை இணையம் வாயிலாக மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அவ்விழா புதிய இயல்புக்கேற்ப மாற்று வழிகளில் கொண்டாடப்படும் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ  சமயங்களுக்கான சிறப்பு செயல் குழுவின் தலைவர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இரவு 9.00 மணி தொடங்கி 68 நிமிடங்களுக்கு 12 சிறப்பு படைப்புகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சிகளில் பிரசித்தி பெற்ற கலைக்குழுவினர் பங்கேற்று பாடல்கள், நடனம் மற்றும் கலாசார படைப்புகளை தரமுடன் வழங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியும் இடம் பெறும் என்று இன்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

 

 


Pengarang :