A. Xavier Jayakumar
NATIONALSELANGORYB ACTIVITIES

டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது அவரின் கடமை

கோலலங்காட் பிப் 4;- டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமுக்கு எதிரான போலீஸ் விசாரணை அரசாங்கத்தின் அப்பட்டமான மிரட்டல் செயலாகும். டத்தோ ஸ்ரீ அன்வர் கோரிய நீதித்துறை மறுவாய்வு அவரது அரசியலமைப்பு உரிமைகளுக்கு உட்பட்டது,  அதுபோன்ற  செயல்கள் மதிக்கப்பட வேண்டும்.  அது டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது அவரின் கடமை.

மாட்சிமை தங்கிய  பேரரசரிடம்  மக்கள்  கோரிக்கை வைப்பதோ  முறையிடுவதோ  எவ்வகையிலும் தப்பாகாது. யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு வழங்கப்பட்ட ஆலோசனை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று டத்தோ ஸ்ரீ அன்வர்  நீதிமன்றங்களிலிருந்து ஒரு  தீர்ப்பைக் கோருவதால் அத்தகைய செயலை  நிந்தனையாகக்  கொள்ள முடியாது.  அதனால் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது கடமை மீதான  விசாரணையை நியாயப்படுத்த முடியாது என்றார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமானடத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

மேலும் , அந்த  விண்ணப்பத்தில் பட்டியலிடப்பட்ட பிரதிவாதிகள் அரசாங்கமும் பிரதமரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்,  பேரரசரோ அல்லது அரசச் சபையோ அல்ல.

அவசரநிலை சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அது ஒரு நீதித்துறை மறுவாய்வுக்கு அஞ்சக்கூடாது, ஏனெனில் அது அதன் சட்டபூர்வமான தன்மையை மட்டுமே உறுதிப்படுத்தியிருக்கும்.

அரசாங்கத்தின் முன்னுரிமைகள் எங்கே உள்ளன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  எதனைக் கட்டுப்படுத்த  அரசாங்கம் அவசரக்காலத்தை  அறிவித்ததோ,  அது எதிர்மறையாகச் சென்று கொண்டுள்ளது.

கோவிட்19 நோய்த்தொற்று  ஒவ்வொரு நாளும் நான்கு இலக்கத்தில்  இருக்கும்போது அனைத்துத் துறைகளையும் திறக்க வலியுறுத்துவதன்  மூலம் அவர்கள்  அரண்மனையிடம் விடுத்த  கோரிக்கைக்குச்  சரியான, நீதியான  சான்றுகளைக் காண்பிக்கத் தவறிவிட்டார்கள்  என்பதை நன்கு புலப்படுத்தியுள்ளது.

அவசரக்காலப் பிரகடனமின்றி, நடமாட்டக் கட்டுப்பாட்டு  ஆணையைச்  சரியாகச்  செயல்படுத்த முடியாது, அல்லது  அதன் செயல்பாடு( MCO) திறனைப் பாதிக்கும் என்பதற்கு  எந்த ஆதாரமோ அல்லது  அடிப்படையோ இன்றி  அவசரநிலை அறிவிப்புக்கான கட்டளையை  நியாயப்படுத்த முடியாது. மக்கள்  அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .

டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது தவறாகாது. ஒரு குறிப்பிட்ட  அரசியல் பிரிவினரின் அரசியல்  விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும்  நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்களின் நலனில் கவனம் செலுத்தவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் வணிகங்கள் உயிர்வாழ உதவும் வழிகளைக் காணவும் உள்துறை அமைச்சரை நான் அழைக்கிறேன் என்றார்  கெஅடிலான் கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர்  ஜெயக்குமார்.

 

 

 


Pengarang :