NATIONAL

நோன்பு பெருநாளின் போது தயார் நிலையில் 10,000 தீயணைப்பு வீரர்கள்

புத்ரா ஜெயா, ஏப் 27– அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போது எதிர்பாராத அசம்பாவிதங்களை எதிர்கொள்ள பத்தாயிரம் தீயணைப்பு மற்றும்  மீட்புத் துறை வீரர்களும் அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பர்.

பெருநாள் காலத்தில் தீயணைப்புத் துறையின் சேவையில் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை அத்துறையின் அனைத்து 15,000 வீர்களும் கொண்டிருப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

நோன்புப் பெருநாளின் போது விடுமுறைகள் முடக்கப்படுவது தொடர்பான உத்தரவு கடிதத்தை நாட்டிலுள்ள அனைத்து 322 தீயணைப்பு நிலையங்களையும் சேர்ந்த 15,000 வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம். தீச்சம்பவம், விபத்து, நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் மனிதாபிமான பணிகளில் விரைந்து ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :