சுங்கை காண்டீசில் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் பாதி பொருள்கள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம்நவ 22-  இங்குள்ள தாமான் துன் தேஜா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய பாதி பொருள்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

சுங்கை கண்டிஸ் தொகுதி நிலையிலான இந்த விற்பனை இன்று காலை 10.00  மணிக்குத்  தொடங்கவிருந்த நிலையில் பொதுமக்கள் பொருள்களை வாங்க  நீண்ட வரிசையில் காத்திருந்த காரணத்தால் காலை 9.00 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டதாக இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ரிடுவான் அஸ்மி கூறினார்.

எல்லாப் பொருட்களும் விற்றுத் தீர்ந்தால் 20,000 வெள்ளி வரை வருமானம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய பாதி பொருள்கள் விற்பனையாகி 10,000  வெள்ளி வருமானம் கைவசம் இருந்தது என்று அவர் சொன்னார்..

நாங்கள் இங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல் முறை. இத்திட்டத்திற்கு குடியிருப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. அடிக்கடி இந்த விற்பனையை நடத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்  என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த செப்டம்பர் 6 முதல் நடைபெறும் இந்த மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தில் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் சமையல் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிட்டியுள்ளது.

இந்த மலிவு விற்பனையில்  நடுத்தர கோழி 10.00 வெள்ளி விலையிலும்  இறைச்சி 10.00 வெள்ளிக்கும்  பி கிரேடு முட்டை ஒரு  தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  விற்பனையில் மீன் 6.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் மற்றும் 5 கிலோ அரிசி  அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

 அனைத்து 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 160 இடங்களில்  மலிவு விற்பனையை நடத்த   மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. 

பொதுமக்கள் பி.கே.பி.எஸ். சமூக ஊடகங்கள் வாயிலாக  அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக  மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து  கொள்ளலாம்.


Pengarang :