லபுவான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த ஆறு அந்நிய நாட்டினர் கைது

லபுவான், நவ 26- லபுவான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்தக்
குற்றத்திற்காக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.)
உள்ளுர் மீன்படி படகொன்றைத் தடுத்து வைத்ததோடு அதன் மாலுமி
மற்றும் ஆறு பணியாளர்களையும் கைது செய்தது.

லபுவானிலிருந்து 31.2 கடல் மைல் பகுதியில் மீன்பிடி படகொன்று மீன்
பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கே.எம். பிஸ்தாரி ரோந்து படகு
கண்டு பிடித்ததாக லபுவான் கடல் பிராந்திய இயக்குநர் கேப்டன் நுடின்
ஜூசோ கூறினார்.

அந்த படகில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் ஐந்து வியட்னாமியர்கள்
மற்றும் ஒரு இந்தோனேசியர் ஆகியோர் அங்கீகரிக்கப்படாத கருவிகளைப்
பயன்படுத்தி கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

முறையான பயணப் பத்திரங்களைக் கொண்டிராத இருபது முதல் 44 வயது
வரையிலான அந்த ஐவரோடு படகின் மாலுமியும் கைது செய்யப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.

மலேசிய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக 1985ஆம் ஆண்டு
மீன்பிடிச் சட்டம் மற்றும் செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராதக்
காரணத்திற்காக 1959/1953ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ்
அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :