ANTARABANGSAHEALTH

பிரான்சில் புதிய கோவிட்-19 அலை – பிரெஞ்சு பிரதமர் எச்சரித்துள்ளார்.

பாரிஸ், நவ 30 – பிரான்சில் கோவிட் -19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் செவ்வாயன்று எச்சரித்தார், ஒவ்வொரு நாளும் நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் கண்டறியப்படுகின்றன எனக் கூறினார்.

பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் பேசிய போர்ன், வைரஸால் அதிக ஆபத்தில் இருப்பதாக கருதப்படுபவர் களிடையே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் விகிதம் குறைவாக இருப்பதாகக் கவலையுடன் தெரிவித்தார்.  கோவிட் -19 இன்னும் ஆபத்தானதாக உள்ளது என்று எச்சரித்தார்.  ஆபத்தான நிலையில் உள்ளவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் ஷாட் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“கோவிட் தொற்று நோய் மீண்டும் தொடங்குகிறது,” என்று அவர் பிரெஞ்சு பிரதிநிதிகளிடம் கூறினார், ஒரு வாரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 சதவீதமாகவும் மற்றும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 22 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த வாரம் கோவிட் -19 னால் 400 இறப்புகள் பதிவாகியுள்ளது என தெரிவித்தார். இந்த புதிய வைரஸ் அலை கோவிட்-19 இன்னும் நம்மிடையே உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.” எனக் கூறினார்.

முதல் பிரெஞ்சு பெண் பிரதமராகிய அவர் நாட்டின் மருத்துவமனையில் கோவிட்-19யினால் கூடுதல் வேலை அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும் என எச்சரித்தார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள தரப்பினர் மற்றும் நெரிசலான பகுதிகளுக்குச் செல்பவர்கள் முகக் கவரியை அணிதல் போன்ற சில தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என போர்ன் எடுத்துரைத்தார்.

– பெர்னாமா


Pengarang :