NATIONAL

மாணவர்களின் எழுத்து ஆளுமையைத்  தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் – கல்வி அமைச்சர்

ஷா ஆலம், டிச.9: மாணவர்களிடையே எழுத்து ஆளுமையை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், சர்வதேச  தர  நிலையை அடைய அவர்களுக்கு அது உதவும் என்றார் கல்வி அமைச்சர்.

கல்வி மற்றும் கலைகள் உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்தும் திட்டத்தை அடைவதற்கு அதன் அணுகுமுறையை விரிவுபடுத்துவது தரத்தை மேம்படுத்துவதும் ஒரு நல்ல முயற்சி என்று அமைச்சர் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசியக் கலைப் பள்ளியின் (YET) வளர்ந்து வரும் திறமைகள் எனும் திட்டத்தின் (YET) கீழ் ஐந்து கதைப் புத்தகங்களை 2022ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (SIBF) அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

13 மற்றும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் சொந்த அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அப்புத்தகங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள விளக்கப்படங்களும் அவர்களின் சுயப் படைப்பு என்பதனை எண்ணி அவர் பெருமைப்பட்டார்.

புத்தங்களை வெளியிட்ட அனுபவம், அம் மாணவர்களின் திறமைகளை மேலும் தொழில்முறை திசையை நோக்கியும் மேம்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.


Pengarang :