SELANGOR

கோம்பாக் தொகுதி மக்களுடன் அமிருடின் சந்திப்பு- சுங்கை பூசு நிலச்சரிவையும் பார்வையிட்டார்

கோம்பாக், டிச 12- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கோம்பாக் தொகுதி மக்களை இன்று சந்தித்ததோடு அந்த நாடாளுமன்றத்
தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வருகை
மேற்கொண்டார்.

தனது பயணத்தின் தொடக்கமாக அவர் செலாயாங் பாரு மார்க்கெட்டிற்கு
வருகை புரிந்தார். அங்குள்ள வர்த்தகர்களுடன் அளவலாவிய அவர், அந்த
மார்க்கெட்டின் வடிகால் முறையையும் பார்வையிட்டார். மந்திரி புசாரின்
இந்த பயணத்தின் போது கோம்பாக் மாவட்ட அதிகாரி நோர் அஸ்லினா
அப்துல் அஜிசும் உடனிருந்தார்.

பின்னர் அவர், கம்போங் நக்கோடா மக்களுடன் காலை சிற்றுண்டி
அருந்தினார். அடுத்தப் பயணமாக நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்ட கம்போங்
சுங்கை பூசு பகுதிக்கு அவர் வருகை மேற்கொண்டார்.
இன்று மாலை சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு செல்லவிருக்கும்
அமிருடின், அங்கு பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் பணியாளர்களுடனான
விருந்து நிகழ்விலும் வட்டார மக்களுடனான நிகழ்வுகளிலும் கலந்து
கொள்ளவிருக்கிறார்.

கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலில்
கோம்பாக் தொகுதியை 12,729 வாக்குகள் பெரும்பான்மையில் அமிருடின்
கைப்பற்றினார்.


Pengarang :