NATIONAL

மின்சாரக் கட்டணம் உயராது – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்

புத்ராஜெயா, டிச 14: மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இதனால் நாட்டிற்கு ஆண்டுக்கு RM30 பில்லியன் செலவானாலும் இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs), விவசாய நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

“ மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டால் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அது பொருந்தும், ஏனெனில் அவர்களுக்கு கட்டணம் மிகக் குறைவு, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு இச்சலுகையை வழங்க முடியாது என்றார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், மக்களிடையே மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் முன்மொழிவு எதுவும் இல்லை என்றார்.

எவ்வாறாயினும், பன்னாட்டு நிறுவனங்களுக்கான அதிகரிப்பும் படிப்படியாகவும் நியாயமாகவும் நடக்கும் என்று அன்வார் கூறினார், இது நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது.

பிரதமரின் கூற்றுப்படி, இந்த முடிவு குறித்த விரிவான தகவல்களை இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது அறிவிப்பார்.


Pengarang :