SELANGOR

55 வழிபாட்டு இல்லங்களுக்கு RM593,460 நன்கொடையாக வழங்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 14: நேற்று சிலாங்கூர் அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் திறந்த இல்ல நிகழ்வுடன் இணைந்து சிலாங்கூரில் உள்ள 55 வழிபாட்டு இல்லங்களுக்கு மொத்தம் RM593,460 நன்கொடையாக வழங்கப்பட்டது.

நேற்றிரவு மணி 6 முதல் 10.30 வரை நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் அதில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

திட்டச் செலவுகள் அல்லது வழிபாட்டு தளங்களைப் புதுப்பித்தல் போன்ற வெவ்வேறு தேவைகளைப் பொறுத்து நன்கொடை வழங்கப்படுகிறது என்றார் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்டின் (லிமாஸ்) எஸ்கோ ஹீ லாய் சியான்.

“உண்மையில், நிதி ரீதியாக மட்டுமல்ல, இந்த ஆண்டு இதுவரை புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ட் வழிபாட்டு இல்லங்கள் தொடர்பான 397 நிலப் பிரச்சினைகளை மாநில அரசு வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு இனங்கள் மற்றும் மதத்தினரின் நெருங்கிய ஒத்துழைப்போடு சிலாங்கூர் ஒரு இணக்கமான மாநிலமாக இந்த கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்க முடிந்தது என்று லோய் சியான் கூறினார்.

“இது மற்ற சமூகங்களின் நம்பிக்கைகளைப் பற்றிய புரிதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் முக்கியத் தூண்களில் ஒன்றான மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் அதிகரிக்க முடியும்,“ என்றார்


Pengarang :