NATIONAL

முகநூல் காதலால் பெண்மணி ஒருவர் RM150,000யை இழந்துள்ளார்.

சிபு, டிச 14: கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து முகநூல் மூலம் தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மெய்நிகர் காதல் மோசடியால் ஏமாற்றப்பட்ட 44 வயது பெண் RM152,050 இழந்துள்ளார்.

சிபு மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி கூறுகையில், சந்தேக நபர் அக்டோபர் 8 ஆம் தேதி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, அதிக அளவு பிரிட்டிஷ் கரன்சியை எடுத்துச் சென்றதற்காக இமிக்ரேஷனால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

“நம்பிக்கை மற்றும் பரிதாபத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 10 முதல் டிசம்பர் 5 வரை 27 2 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 27 முறை பணத்தை அனுப்பியுள்ளார்,” என்று ஓர் அறிக்கையில் வழி தெரியவந்துள்ளது.

பணம் செலுத்துவதில் சந்தேகம் ஏற்பட்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், நேற்று இரவு மணி 8 க்கு போலீசில் புகார் செய்வதற்கு முன்பு அவரின் நண்பரை தொடர்பு கொண்டதாக சுல்கிப்லி கூறினார்.

இதற்கிடையில், சுல்கிப்லி, ‘காதல் மோசடி’ சிண்டிகேட்டியிடம் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினார், மேலும் சமூக ஊடகங்களில் மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் வற்புறுத்தலால் எளிதில் திசை திருப்ப வேண்டாம் என்று அவர்களுக்கு நினைவூட்டினார்.

 

– பெர்னாமா


Pengarang :