SELANGOR

சிலாங்கூர் காப்புறுதி (INSAN) திட்டம் தீவிரமாக ஊக்குவித்து வரப்படுகிறது

ஷா ஆலம், டிச 15: சிலாங்கூர் மந்திரி புசார் (இணைப்பு) அல்லது எம்பிஐ, சமூக ஊடகங்கள் மூலம் சிலாங்கூர் காப்புறுதி (INSAN) திட்டத்தைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

மாநில அரசின் இந்த திட்டத்திற்கான பலன்களை அதிகமான மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்கு இந்த முயற்சி என்று அதன் தலைமை செயல் அதிகாரி கூறினார்.

“நாங்கள் ஆறு மில்லியன் மக்களை பதிவு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளோம், அந்த இலக்கை அடைய சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன்வழி அதிகமான மக்கள்  இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்,` என்றார்.

இத்திட்டம் ஆறு மில்லியன் சிலாங்கூர் குடிமக்களுக்கு மாநில அரசு நிறுவனமான எம்பிஐ ஆல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30 நாள் குழந்தை முதல் 80 வயது வரையிலான தனிநபர்களுக்கு இக்காப்பீடு வழங்கப்படும்

இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதித் தேவைகள் அடையாள அட்டை எண்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரி மற்றும் சிலாங்கூர் வாக்காளர் பதிவு மட்டுமே ஆகும்.

RM 60 பில்லியன் மதிப்புடைய காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை பதிந்து கொள்ளலாம்.  நிரந்தர ஊனம் மற்றும் விபத்துகளால் ஏற்படும் இறப்பு போன்றவற்றிற்கு RM10,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்கப்படுகிறது.

நவம்பர் 17 நிலவரப்படி, இந்த மாநிலத்தில் மொத்தம் 3.56 மில்லியன் குடியிருப்பாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே மூலம் இ-வாலட் அப்ஸை பதிவிறக்கி அதில் பதிவு செய்யலாம். மேலும் www.wavpay.net மூலம் கூடுதல் விவரங்களை பெறலாம்.


Pengarang :