SELANGOR

தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத்தைச் சமாளிக்கும் ஆயத்தப் பணிகள் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கின

ஷா ஆலம், டிச.17: இங்கு அருகே உள்ள தாமன் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்தைச் சமாளிக்க தீயணைப்பு வீரர்கள், படகுகள் உள்ளிட்டவை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு போல் 10க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட வெள்ளச் சம்பவத்தைத் தவிர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

“கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோலா சிலாங்கூர் முதல் சிப்பாங் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் நாளை (இன்று) முதல் கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக 3 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

“பம்புகள் மற்றும் வெள்ள தடுப்பு அணைகளை தொடர்ந்து கண்காணித்து நிலைமையை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம்” என்று வீ.கணபதிராவ் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

முன்னதாக, மெட்மலேசியா குறிப்பிடத்தக்க வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டது அதாவது இன்று முதல் நாட்டில் பருவமழை காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது டிசம்பர் 17 முதல் 20 வரை தீபகற்பத்தின் கிழக்கு மாநிலங்களில் தொடர் மழையைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கொண்டுள்ளது. மேலும், வெள்ளம், திடீர் வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Pengarang :