NATIONAL

நிலச்சரிவில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

சுங்கை பூலோ, டிச 17: பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப் படுவார்கள் என்று இன்னும் நம்புகிறார்கள்.

இந்த விஷயத்தை இங்குள்ள தடயவியல் துறை, சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து புத்த சூ-சி அறக்கட்டளை தன்னார்வலர், டான் சீ வெய் (50), பகிர்ந்து கொண்டார்.

“இறந்தவர்களை அடையாளம் காண அவர்களின் குடும்பத்தார் சிலர் ஏற்கனவே டியோக்சிரைபோநியூக்ளிக் அமிலம் (டிஎன்ஏ) தரவை வழங்கியிருந்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் அல்லது உறவினர்கள் இன்னும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகிறார்கள் ” என்று டான் கூறினார்.

“நாங்கள் கோரப் பட்டச் சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளையும் வழங்குகிறோம்,” என்று அந்த தன்னார்வலர் கூறினார்.

நேற்று முதல் மொத்தம் 50 தன்னார்வலர்கள் சுங்கை பூலோ மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் உலு யாம் பாரு காவல் நிலையம் எனப் பல இடங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக, கண்டு பிடிக்கப்படாத மேலும் 12 பேரை மீட்கும் (SAR) நடவடிக்கை இன்று காலை மணி 8க்கு மீண்டும் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 2.42 அளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு நிலவரப்படி, 12 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

– பெர்னாமா


Pengarang :