SELANGOR

மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன

கோலா சிலாங்கூர், டிச 21: புக்கிட் ரோத்தானில் அந்-நூரியா மசூதி, தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் ஸ்ரீ சக்தி கோவில் ஒரே இடத்தில் மிக அருகாமையில் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

தமிழ் மெதடிஸ் தேவாலயத்தின் பாதிரியார் ஜெரட் தமிழ்ச்செல்வன் கருத்துப்படி, ஒரு சில தரப்பினர் விளையாட முயற்சிக்கும் இன, மத உணர்வுகளின்  தீ  அப்பகுதி மக்களிடம் அதிகம் பற்றவில்லை.

“முதியவர்களிடமிருந்து பெற்ற நல்லிணக்கத்தை நாங்கள் இன்னும் பேணுகிறோம், ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் உதவ முயற்சிக்கிறோம்,“ என்று குறிப்பிட்டார். மேலும், அன்-நுரியா மசூதி மற்றும்  ஸ்ரீ சக்தி கோயில் நிர்வாகத்தினர் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து, ஸ்ரீ சக்தி தேவஸ்தானம் கோவிலின் பூ விற்பனையாளர் ஈஸ்வரி (64) கூறுகையில், குறிப்பாக விடுமுறை நாட்களில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் அருகருகே கட்டப்பட்ட இருப்பதைக் காணவும், அவற்றைச் சுற்றியுள்ள இணக்கமான சூழலை உணரவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்.

மேலும் அவர் “எங்களுக்கு இங்கு எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், ஒருவருக்கொருவர் உதவுகிறோம்,” என்று கூறினார்.

தமிழ் மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் தவேத்துராஜன் தாமஸ் பொறுத்தவரை, ஒரு ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க சகிப்புத்தன்மையை எவ்வாறு வளர்க்க முடியும் என்பதற்கு இங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒரு எடுத்துக்காட்டு கூறினார்.

மேலும், வழிபாடு இல்லங்களில் அடைக்கப்பட்ட வடிகால் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அரசு உதவ முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

குறிப்பாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடிய சூழ்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது, இது குறித்து  ஒரு முறை கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சிலுக்குத் (MPKS) தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.


Pengarang :