SELANGOR

400 மாணவர்கள் பள்ளி உபகரண உதவியைப் பெற்றனர் – சட்ட மன்ற உறுப்பினர் 

ஷா ஆலம், டிச 22: சுபாங் ஜெயா மாநில சட்ட மன்றத்தை சுற்றியுள்ள பள்ளிகளில் மொத்தம் 400 மாணவர்களுக்குப் புத்தகப் பை, காலணிகள் மற்றும் எழுதும் உபகரணங்களின் வடிவத்தில் பள்ளி நன்கொடைகளைப் பெற்றனர்.

சுபாங் ஜெயா பௌத்தச் சங்கத்துடன் இணைந்து அவரது தரப்பு பள்ளிப் பொருட்கள் வாங்க RM7,000 யை ஒதுக்கியதாக பிரதிநிதி மிஷல் இங் தெரிவித்தார்.

“இந்த பள்ளி நன்கொடை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது, மேலும் இந்த முறை கூடுதலான மாணவர்கள் அப்பலனைப் பெறுவதற்கு நாங்கள் சங்கத்துடன் இணைந்து செயல் படுகிறோம்.

“இந்த நேரத்தில், மொத்தம் 400 ஏழ்மையான மாணவர்கள் அவ்வுதவியைப் பெற்றனர்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கொடுக்கப்பட்ட உதவி குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் என்று நம்புவதாக மேலும் கூறினார்.

முன்னதாக, சுபாங் ஜெயா மாநிலச் சட்ட மன்றம் ஜனவரி முதல் நவம்பர் வரை RM94,225 தொகையை அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கியதாக தெரிவித்தார்.

தேசியப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், சமயப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள் என மொத்தம் 16 பள்ளிகள் அந்நிதியைப் பெற்றன.


Pengarang :