SELANGOR

பின்புற வாளகம் அசுத்தமாக இருந்ததால் உணவகம் ஒன்றுக்கு இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன – கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், டிச 22: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) கடந்த
திங்கட்கிழமை கடையின் பின்புறத்தில் குப்பைகளை கொட்டியதற்காகப் பன்திங்கில்
உள்ள உணவு வளாகத்திற்கு இரண்டு நோட்டீஸ்களை வழங்கியது.

உள்ளூர் அதிகார சபையின் படி, சிறிய சட்டம் 21(1)(d), வணிகம் மற்றும் தொழில்துறை
உரிமம் சட்டம் 2007 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினசரி ரோந்து மற்றும் கண்காணிப்பு மூலமாகக் கோலா லங்காட் முனிசிபல்
கவுன்சில் அசுத்தமாக உள்ள உணவு வளாகத்திற்கு எதிராக இரண்டு நோட்டீஸ்களை
வெளியிட்டது," என்று இன்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது

அதன்படி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அந்தந்த
வளாகத்தின் பின்புறத் தூய்மையைப் பராமரிக்குமாறு உணவகங்களின்
உரிமையாளர்களுக்கு கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் நினைவூட்டியது


Pengarang :