ANTARABANGSA

சீனாவில் மறுபடியும் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிக்கின்றன

ஜெனீவா, டிச 22 – சீனாவில் கோவிட்-19 இன் சம்பவ எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மேலும் உலகச் சுகாதார அமைப்பு (WHO) பெய்ஜிங்கில் எளிதாகக் கோவிட்-19 தொற்றுக்கு இலக்காக்கூடியத் தரப்பினருக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறது.

புதன்கிழமை, உலகச் சுகாதார அமைப்பின்  தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீனாவின் தடுப்பூசி செலுத்தும் முயற்சியை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவின் நிலைமை பற்றிய விரிவான இடர் மதிப்பீட்டை மேற்கொள்ள, நோயின் தீவிரம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை பற்றிய விரிவான தகவல்கள் தேவை என்று டெட்ரோஸ் மேலும் கூறினார்.

சீனத் தேசியச் சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, சீனாவில் கடந்த நாளில் 2,286 புதியக் கொரோனா வைரஸ் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தத்தில், டிசம்பர் 16 நிலவரப்படி, சீனாவில் 34,334 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :