NATIONAL

வெள்ளம்- சிலாங்கூர், சரவாவில் புதிதாக வெள்ள நிவாரண மையங்கள் திறப்பு

கோலாலம்பூர், டிச 23- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாகச் சிலாங்கூரும் சரவாவும் இணைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அவ்விரு மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள
வேளையில் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. பகாங் மாநிலத்தைப் பொறுத்த வரை வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.

சரவா மாநிலத்தில் இன்று காலை 7.00 மணி நிலவரப்படி 30 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேரை தங்க வைப்பதற்காக மூன்று துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகச் மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

அந்த மூன்று மையங்களும் கூச்சிங்கில் அமைந்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியதாகவும் அக்குழுதெரிவித்தது.

சிலாங்கூரில் நேற்றிவு புதிதாக இரு துயர் துடைப்பு மையங்கள்திறக்கப்பட்டதாக மாநில வெள்ள மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது. ஷா ஆலம், மெர்பாவ் செம்பாக் இடைநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் 20 பேரும் கோல சிலாங்கூர், டேசா கோல்பீல்டு எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் 34 பேரும் தங்கியுள்ளனர்.

பேராக் மாநிலத்திலுள்ள துயர் துடைப்பு மையங்களில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் நேற்றிரவு தங்கியிருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 15 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேராக குறைந்துள்ளது.

திரங்கானு மாநிலத்தில் நேற்றிவு 27,396 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 25,895ஆக குறைந்தது.


Pengarang :