NATIONAL

எட்டாவது நாளாகப் பத்தாங் காலியில் மீட்பு பணி தொடங்கியுள்ளது

பத்தாங் காலி, டிச.23: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் எஞ்சிய இன்னும் ஒருவரை தேடும் பணி இன்று காலை எட்டாவது நாளாகத் தொடங்கியது.

தேடும் பணி காலை 8 மணியளவில் மீட்புக் குழுவினரால் தொடங்கப்பட்டது. நேற்றைய நாளுடன் ஒப்பிடும்போது இன்று காலை தேடுதல் இடத்தில் வானிலை பிரகாசமாக உள்ளது. நேற்று வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கை பிற்பகலில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் நிகழ்ந்த இத் துயரச் சம்பவத்தில் இதுவரை 61 பேர் உயிர் பிழைத்து வேளையில் 30 உயிர்கள் பலியாகியுள்ளன. மொத்தம் 92 பாதிக்கப் பட்டவர்களில்  இன்னும் ஒருவர் மட்டுமே காணவில்லை.

நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 92, முன்பு அறிவிக்கப்பட்டபடி 94 அல்ல என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.

குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் பல முறை கணக்கீடுகள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை பெறப்பட்டது.

 

– பெர்னாமா


Pengarang :