NATIONAL

நிறுத்தப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின்  நீரின் மாசுபாடு அளவீடு பாதுகாப்பாக இல்லை

ஷா ஆலம், டிச.25: நேற்று நிறுத்தப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (எல்ஆர்ஏ) தண்ணீரின் துர்நாற்ற மாசு அளவீடு நிலை அந்நிலையங்கள் மீண்டும்  செயல்பட பாதுகாப்பாக இல்லை.

இன்று காலை 8 மணி நிலவரப்படி,  புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மாசு அளவீடு 2 டன் எனப் பதிவாகியுள்ள வேளையில் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அளவீடு 0 டன் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது.

“0 டன் அளவீடு தொடர்ந்து மூன்று முறை பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும்” என்று முகநூல் மூலம் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

ஆயர் சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) மாசுபாடு ஏற்பட்ட பகுதியில் உள்ள நதி நீரின் தரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

நேற்று, நெகிரி செம்பிலானில் உள்ள பண்டார் செரீனியா அருகே இருக்கும் “ELITE“  நெடுஞ்சாலையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த லாரி ஏற்றி சென்ற  வாசனை திரவியங்களின் சாரம் கசிந்ததால், அவ்விரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

பயனர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை https://hentitugas.airselangor.com/ இல் அல்லது Air Selangor  மூலம் பெறலாம்.


Pengarang :