NATIONAL

புக்கிட் பெண்டரா மலை ரயில் பொழுது போக்கு சேவை நேற்று பல மணி நேரம் தடைப்பட்டது

ஜார்ஜ் டவுன், டிச.26- டிராக் பிரேக் ஹோஸில் ஏற்பட்ட கசிவு காரணமாகப் புக்கிட் பெண்டரா மலை பொழுது போக்கு ரயில் சேவை நேற்று பல மணி நேரம் தடைப்பட்டது.

பெர்படானன் புக்கிட் பெண்டேரா புலாவ் பினாங்கு (பிபிபிபிபி) ஒரு அறிக்கையில், ரயில் சேவை மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவித்தது.

“விசாரணைக்குப் பிறகு, பெர்படானன் புக்கிட் பெண்டேரா புலாவ் பினாங்கின் பராமரிப்புக் குழு டிராக் பிரேக் ஹோஸில் கசிவைக் கண்டறிந்தது மற்றும் அப்பகுதியை மாற்றுவதற்கும் அது முழுமையாக செயல்படுத்துவதற்கும் சிறிது நேரம் தேவைப்பட்டது.

“இச்சேவை இடையூறு போது பார்வையாளர்கள் பொறுமையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தது பெர்படானன் புக்கிட் பெண்டேரா புலாவ் பினாங்கு. மேலும் சேவை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பெண்டேரா குடியிருப்பாளர்கள் சங்கத்தின்  பேருந்து சேவைக்கும் ஜீப் சேவைக்கும் மற்றும் ராயல் மலேசியக் காவல்துறையின் (PDRM) உடனடி நடவைக்கைக்கும் தனது நன்றியைத் தெரிவித்தது.

மேலும், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக ஆபரேட்டர்களின் புரிதல் மற்றும் ஆதரவுக்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

“பெர்படானன் புக்கிட் பெண்டேரா புலாவ் பினாங்கு, இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்பு கோரியுள்ளது”

 மலை ரயில் பொழுது போக்கு சேவையின் இடையூறு காரணமாகப், புக்கிட் பெண்டேரா உச்சியில் கிறிஸ்துமஸ் விடுமுறையை அனுபவிக்கும் திட்டம் நடக்காமல் போனதால், சுமார் 1,000 பார்வையாளர்கள் ஏமாற்ற மடைந்ததாக ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

புக்கிட் பெண்டராவில் உள்ள மலை ரயில் சேவையின் பிரச்சனை குறித்து பார்வையாளர்களின் வீடியோ கிளிப் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

– பெர்னாமா


Pengarang :