NATIONAL

வெளிப்புற நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் – சுற்றுலா சிலாங்கூர்

ஷா ஆலம், டிச 27: பொதுமக்கள், குறிப்பாக வெளிப்புற நடவடிக்கைகளை விரும்புவோர், மழைக்காலத்தில் அபாயகரமான பகுதிகளில் நடைபயணம் மற்றும் சுற்றுலா போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தள்ளிப் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுற்றுலா சிலாங்கூர் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகளில் ஒருவர் காட்டில் தொலைந்து போகலாம், நிலச்சரிவு அல்லது வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளலாம்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பகுதியைப் பற்றிய போதியத் தகவலும், மழைக்காலம் குறித்த தகவல்களும் இல்லாவிட்டால், சுற்றுலாப் பயணிகள் ஆபத்துக்கு ஆளாக நேரிடும்.

பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவைக் கருத்தில் கொண்டு பொது விடுமுறையைத் திட்டமிடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுற்றுலா சிலாங்கூர் கேட்டுக் கொண்டுள்ளது.

“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இது போன்ற ஆபத்தான பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு நினைவூட்ட வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்,”.

நவம்பர் பாதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை வடகிழக்கு பருவமழை நாட்டை தாக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இதனால் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம்.


Pengarang :