SELANGOR

சாலை சமிக்ஞை விளக்கு பகுதிகளில் பழ வியாபாரம்- கோல லங்காட் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

பந்திங், டிச 28- இங்குள்ள சுங்கை மங்கீஸ் சாலை சமிக்ஞை விளக்கு
பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கோல
லங்காட் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை
மேற்கொண்டனர்.

இம்மாதம் 24ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை
நடவடிக்கையின் போது வெளிநாட்டுப் பிரஜை என நம்பப்படும் பெண்
கொய்யா மற்றும் மாம்பழங்களை சாலை சமிக்ஞை விளக்குகளில் நிற்கும்
வாகனமோட்டிகளிடம் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டனர்.

சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு எதிராக 2007ஆம் ஆண்டு எம்.டி.கே.எல்.
துணைச் சட்டத்தின் 42(1 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட
அமலாக்க அதிகாரிகள் அவரிடமிருந்து ஆறு மாம்பழ பொட்டலங்களையும்
ஏழு கொய்யாப் பழ பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

இத்தகைய வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அனைத்துப்
பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
என நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.

சாலை சமிக்ஞை விளக்கு பகுதிகளில் பழ வியாபாரத்தில் ஈடுபடும்
தரப்பினர் தொடர்பான தகவல்களை பொது மக்கள் 012-3004217 என்ற
வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாகத் தெரிவிக்கலாம் எனவும் அது தெரிவித்தது.


Pengarang :